Tuesday, 22 September 2015

கால மாற்றம்

சித்திரை இரவில் 
கயிற்று கட்டிலில் படுத்து 
தென்னை ஓலைக்கு இடையில்  
ரசித்து பார்த்த நிலவை 
இன்று  
தேடி பாரக்கிறேன்
தென்னை ஓலையை,
அங்கே வளர்ந்து நிற்கும் 
கட்டிடங்களுக்கு இடையில்.


விவசாயி

பட்டினி என்பது அறியாது
உழைத்து உண்ட சாதி,
படுத்து கிடந்த கழனியை
இன்று பரிதவித்து தேடுது.

அன்று பஞ்சம் என்ற ஒன்று
பரிதவித்து நின்றது,
இன்று தஞ்சம் என்று வந்தது
தலைவிரித்து ஆடுது.

கழனியிலே நடந்து நடந்து 
அளந்தாச்சு - கால்களாலே,
இன்று அளந்து அளந்து
நட்டாச்சு – கானிகால்களாலே.

தாகம் என்று வந்தோருக்கு
மொண்டு கொடுத்த சாதி,
தண்ணீர் என்று தேடி - இன்று
கால் கடுக்க நடக்குது.

வரப்பேறி வழிந்தோடும் நீரை 
வாய்க்காலுக்கு திருப்பி விட்ட சாதி,
விழி நீரை வழித்து போட்டு
பயிர் வளர காத்துக்கிடக்குது.

கல்லணை கட்டி, நீரை தேக்கி வைத்த சாதி
விழிமேல் கை வைத்து எதிர்பாத்து காத்திருக்குது
கேட்டவருக்கு எடுத்து கொடுத்த சாதி
இன்று கேட்டுகிட்டு கையையேந்தி நிக்குது.

காத்திருந்து காத்திருந்து காணாமல் போன சாதி,
உழுது உழுது ஓடாய் போன சாதி,
முயன்று முயன்று முடியாது போன சாதி,
விழி பிதுங்கி, அழிந்து கொண்டிருக்குது அந்த சாதி,

காலமெல்லாம் கழனியில் உழைத்துவந்த சாதி,
கால் வலிக்க இன்றும் காத்து கிடக்கும் சாதி,
வாய்ப்பு என்று வந்தால் வென்று காட்டும் சாதி,
விவசாயி என்று பெயர் பெற்ற சாதி.
                                          
      

Tuesday, 15 September 2015

நட்சத்திரங்கள்

இபொழுது 
தெரிந்து கொண்டேன்,
இவள் சிரிப்பிலிருந்து 
சிந்திய முத்துக்கள் தான்
வானில் தஞ்சம் கொண்ட 
நட்சத்திரங்கள் என்று 

பயம்

சூரியனும்  
சுழலும் இவள்  கண்களை பார்க்க
பயந்து தான் 
கண்களை கூசச்செய்து 
மூடிக்கொள்ள செய்கிறான்,
இல்லையேல் 
பணிந்து சென்றுவிடுவான் 
சுழலும் இவள் கண்களுக்கு பின்னால்,
தினமும் இவன் சுற்றும் 
பூமியரசியையும் வேண்டாமென்று.
 

தன்னை மறந்து

இவள் இதழ்கள் என்னதேன் கூடா
இவள் சிந்தும்
ஒவ்வொரு துளி புன்னைகையிலும்
சுவைக்கிறது என் இதயம்.

விழிகள் என்னமடல் அவிழ்க்கும் மலர்களா,
இமைக்கும் ஒவ்வொரு முறையும்
அகல மறுக்கிறது என் விழிகள்
ன்னை மறந்து...

Thursday, 10 September 2015

சிந்தனையும் செயலும்

துணிந்தவன் துவளுவதில்லை
துவண்டவன் துணிவதில்லை.

துவண்டவன் துணிந்தால்
முயற்சி என்பது விதையாகும்.

துணிந்தவன் முயன்றால்
வெற்றி என்பது மாலையாகும்.

இன்பங்களும் இன்னல்களும்
இரு கண்களை போல,

இருப்பவை இரண்டானாலும்
காட்சி என்பது ஒன்றுதான்.

கலைஞனின் கண்களுக்கு
கல்லும் சிற்பம் தான்.

கவிஞனின் கற்பனைக்கு
புதர்கள் கூட பூந்தோட்டங்கள் தான்.

அழகான சிந்தனை
உன்னை சிறந்தவனாகும்.

ஆபத்தான சிந்தனை
உன்னை சீரழிக்கும்.

சிந்தித்திப்பவன் அமரனாவான்
நிந்திப்பவன் அரக்கனாவான்.

நீ அமரனாவதும்

அரக்கனாவதும் உன் சிந்தனையில்.

என் மழலையின் புன்னகை

கவிஞர்களுக்கு எட்டாத கற்பனை
இவள் புன்னகை 

சித்திரத்தில் தீட்டப்படாத ஓவியம்
இவள் புன்னகை 

கல்லில் செதுக்கபாடாத சிற்பம்
இவள் புன்னகை 

வார்த்தைகளில் பாடபடாத கவிதை.
இவள் புன்னகை 

வண்டுகளுக்கு தெரியாத வாசம்.
இவள் புன்னகை 

தேனீக்கள் அறியாத தேன்கூடு.
இவள் புன்னகை 

திகட்டாத தித்திக்கும் இன்பம்
இவள் புன்னகை 

வரையறை இல்லா இலக்கணம்
இவள் புன்னகை 

வறட்சி அறியா நீரோடை 
இவள் புன்னகை 

பேரலைகள் தரும் சிறு கடல்
இவள் புன்னகை 

மனதில் சுகமளிக்கும் வன்முறை
இவள் புன்னகை.


Wednesday, 2 September 2015

மறைக்க மறவாதீர்

உ ள்ளம் ரசித்ததை 
உ தடுகள் உச்சரித்தால் - முதலில் 
உ ள்ளம் குளிரும் - பிறகு 
உ லகமே உனக்கு சுடும்.

உ ள்ளே ரசித்தாலும் 

உ தட்டில் மறைத்து பேசுங்கள் 
உ ண்மையை மறைத்து பழகுங்கள்.

உ ண்மை என்பதையும் 
உ ரக்க சொன்னால் 
உ லகம் உன்னை வெறுக்கும் 
எ ன்பதை மறவாதீர். 

உ ள்ளத்து பொய்யும்
உ தட்டோரம் போலி புன்னகையும்
உ ன்னை மற்றவர்  உள்ளத்தில் உயர்த்தும்
எ  ன்பதை மறவாதீர்.


Tuesday, 1 September 2015

கோபிக்கவா - நன்றி கூறவா

நீ வா என்றதும் உன்னோடு வந்த 
என் இதயத்தை
துரோகி என்று சொல்லவா... 
அல்லது
நன்றி கூறி பாராட்டவா...

கவன சிதறல் - காதல்

ஒரு பெண்ணிடம் நீ கொள்ளும் கனநேர
கவன சிதறல் கூட, உன்னை ,
அவளிடம்
காதல் கொள்ள செய்யும்...

காதலுக்கு வாழ்த்துக்கள்


இமயம் தாண்டியும் உதிக்கும்
சூரியன் போல
கரையை தாண்டி வரும்
கடல் அலை போல
மீண்டும் பிறந்த ஒரு காவியம்.

இலக்கணங்கள் மாறினாலும்
வரம்புகள் மீறினாலும்
உணர்வுகள் மதிக்கப்பட்ட 
ஒரு அற்புதம்.

கடந்து செல்லும் காலத்திலும்
விரைந்து ஓடும் வாழ்க்கையிலும்
உணரப்பட்ட இரு உயிர்களின்
இனிமையான இதய பரிமாற்றம்.

காதல் என்று சொல்லும்
இந்த அற்புத பரிமாற்றத்திற்கு

எனது வாழ்த்துக்கள்.