Thursday, 18 February 2016

ஒருதலை காதல்

தெரியவில்லை   
இருந்தும் பார்க்கிறேன்,
நான் இருக்கும்  
உந்தன் இதயத்தை.
உணரவில்லை 
இருந்தும் சுவாசிக்கிறேன்,
நீ கடந்த பின்னும் வீசும் 
உந்தன் சுவாசத்தை.
கேட்கவில்லை 
இருந்தும் உணர்கிறேன்,
ஒலி பெருக்கி வைத்தும் கேட்காத 
உந்தன் சிரிப்பொலியை.
பார்க்கவில்லை 
இருந்தும் ரசிக்கிறேன்,
என்னை பாராத  
உந்தன் விழிகளை.
தொடவில்லை 
இருந்தும் அணைக்கிறேன்,
உன்னை இன்னும் அழகாய் காட்டும் 
உந்தன் நிழலை.
துணையில்லை 
இருந்தும் நடக்கிறேன்,
துணையாய் இருக்கும் 
உந்தன் காதலை எண்ணி.
உணவில்லை 
இருந்தும் வாழ்கிறேன்,
கேள், என்னோடு கலந்திருக்கும்  
உந்தன் ஜீவனை.
காதலில்லை  
இருந்தும் காத்திருக்கிறேன்,
நிச்சயம் ஒருநாள்  
எந்தன் கரம் பிடிப்பாய் என்ற நம்பிக்கையில்.