Sunday, 11 June 2023

அன்பின் ஆழம்

அறுந்துவிட துடிக்கும் 
அன்பிற்கு தெரிவதில்லை,
அந்த அன்பின் ஆழம்

காயம் பட்ட இதயத்தின் 
வலியை 
காயப்படுத்திய இதயம்
அறிவதில்லை.

Tuesday, 23 May 2023

தொலைந்(த்)த ❤ இதயம்

தொலைந்து போக
மறைந்து போக வேண்டியதில்லை,
நீ விரும்பும் இதயத்தால்
மற(றுத்)ந்து போனாலே போதும்.

Thursday, 26 January 2023

இறை

கேட்ட போது கொடுக்கவில்லை,
வேண்டிய போது கிடைக்கவில்லை,
அழைத்த நேரம் வரவில்லை,
பேசிய நேரம் கேட்கவில்லை,
தேவையான நேரம் உதவவில்லை,
வருந்திய போது ஆருதலாய் இல்லை,
சிரித்த போது காரணமாய் இல்லை,
வலித்த போது மருந்தாய் இல்லை,
மொத்தத்தில் இருந்தும் பயனில்லை...




Thursday, 19 January 2023

பிம்பம்

நீயென, நீ உணரும்
உன் நிழல்
உன்னை விட்டு விலகும் நேரம்
உன் சிந்தையும்
உன் மொழியும் 
உன் செயலும் விலகும்.
உன் இன்பங்கள் இன்னல்களாகும்.
உன் உயிரும், மெய்யும் 
உனக்கு பாரமாய் மாறும்.
உன்னால் உன்னை அறிய முடியாது.