Wednesday, 13 April 2016

காத்திருப்போம் அடுத்த காமராசருக்காகவும், கலாமிற்காகவும்

நல் உள்ளங்கள் நல்லாட்சி செய்த நாடு,
தமிழ் உணர்வு நீங்காத, தன்னலம் இல்லாத,
வந்தோரை வரவேற்று, நல்வாழ்வு வாழ
வழிவகுத்த தலைவர்கள் சென்ற பாதை இது.

நான் என்ற எண்ணம் இல்லை, எனது என்ற உரிமை இல்லை,
மெத்த படித்த மேதாவி இல்லை,
தன்னிலை மறந்த தலைவர்கள் இவர்கள் இல்லை .
நாம் என்ற சிந்தை கொண்டு வாழ்தவர்கள்.

நண்பன், எதிரி என்ற பேதம் இல்லை ,
அவன்யார் சொல்வதற்கு என்ற மமதை  இல்லை,
அறிவிற் சிறந்தோர் எதிர்ப்பவர் ஆனாலும்,
அனைவரையும் அரவணைத்து வாழ்ந்த தலைவர்கள்.

மக்களின் மீது அன்புகொள்ளும் மனம் உண்டு,
அனைவருக்கும், அனைத்தும் என்ற எண்ணம் உண்டு,
நாகரிக அரசியல் சிந்தனை உண்டு,
அதனை வெளிப்படையாய் செயல்படுத்தும் திறன் உண்டு.
இன்றைய அரசியலில் எத்தனை பேருக்கு இவையெல்லாம் உண்டு???

சேர்த்த சொத்துக்களின் பட்டியல் உண்டு,
அவைகள் எங்குள்ளன என்று தெரியாதவர் உண்டு,
சேர்த்ததெல்லாம் போதாது என்பவர் ஏராளம் உண்டு,
மேலும் நம்மை சுரண்ட, இவர்களுக்கு வாரிசும் உண்டு.
இன்றைய அரசியலில் எத்தனை பேருக்கு இவையெல்லாம் இல்லை???

கல்வி அறிவு தேவை இல்லை,
படித்தவருக்கு இங்கு இடமும் இல்லை.
பழி பாவங்களுக்கு அஞ்ச வேண்டியதும் இல்லை,
மக்களை நினைக்கவும், மதிக்ககவும் வேண்டியதும் இல்லை.

சேவை ஒருபோதும் தகுதியாவதில்லை,
அடிப்படை தகுதியென அரசியலுக்கு எதுவுமில்லை .
படித்தவனால் மாற்றம் என்பது நேரும் வரை
நமக்கு நல்ல வழி கிடைக்கபோவதில்லை.

நமக்கெல்லாம் நல்வழி கிடைக்க,
காத்திருப்போம் அடுத்த காமராசருக்காகவும், கலாமிற்காகவும்.

n  மலரட்டும் நல்லாட்சி

தோல்வியுற்றவன்

மறந்து போயும் இறவேன்,
இறந்தாலும் உனை மறவேன்.

என் காதல் மனர்சுவடுகள் அல்ல,
பாறையில் பதிந்த படிவங்கள்.

நீண்டு வளரும் தாடிக்குள் மறைக்கலாம்,
மதியை மயக்கும் மதுவுக்குள் மூழ்கலாம்.

இருந்தும் மறுக்கிறேன்.
உனது சுவடுகளை அழிக்க.

நிலவும் வானும் தான் நீயும், நானும்.
சிறு பொழுதும் பிரிவை உணர்ந்ததில்லை.

இனி ஒரு பொழுதும் சேர வழி இல்லை.
என் வானிற்கு மட்டும் என்றுமே அமாவாசை தான்.

எவரிடமும் கேட்க மனமில்லை,
இருந்தும் அறிகிறேன் உனைபற்றி அனைத்தும்.

சிந்தித்துப்பார்த்தேன்,
கடவுள் கொடுத்த வரம் இது.

தனிமை என்னும் உலகின்
துணையில்லா  அரசன் நான்.

பிறர் சென்ற சுவடுகள் ஆயிரம் இருந்தும்,
என் பாத சுவடுகள் தனியாய் தான் பதிகின்றன.


என்றென்றும் உன் நினைவுகளுடன்தோல்வியுற்றவன்

சில வரிகள்

தன்னை ரசித்தவர் எவரும்
என்னை வெறுத்ததில்லை.
என்னை வெறுக்கும் எவரும்
தன்னை ரசிப்பதில்லை.

                                 --- தனிமை
*******************************************

என்னை உணர்ந்தவர்கள்
என்னை பற்றி உரைத்ததில்லை.
என்னை பற்றி உரைத்தவர்கள்
என்னை உணர்ந்ததுமில்லை.

                              --- மரணம்
******************************************

விட்டுகொடுப்பவன் நல்லவனாகிறான்.
மன்னிப்பவன் மனிதனாகிறான்.
ஆனால்,
மறப்பவன் மட்டுமே மகான் ஆகிறான்.
                                                    ---- மறப்போம்
******************************************