ஒரு காட்சி
தன்னை அலட்சியம்
செய்யும் வேளையில்
கண்கள் இருந்தும்
பயன் என்ன?
உள்ளம் நாடும்
ஒரு துணை
உன்னை ஒதுக்கிடும்
அந்த நிலையில்
உன்னுயிர் இருந்தும்
பயன் என்ன.
நீ நேசிக்கும்
ஒரு உள்ளம்
தன்னை நீ
ஏமாற்றுவதாய் பொருளுணர்ந்தால்
உண்மையில் நேசித்த
உன்னுள்ளத்தின் வலியை
எவர் அறிவாரோ.