Wednesday, 21 January 2015

அலுவலகம்

சிற்றுண்டி நேர
இடைவெளியில் மட்டுமே கேட்கிறது
சிரிப்பொலி...


நானும் அழகுதான்

நானும் கூட அழகுதான்
அவள் கண்களில்
என்னை பார்க்கும் போது....

Wednesday, 14 January 2015

உழவனுக்கு வாழ்த்துக்கள்

 அவனியில் உள்ளோர் உணவருந்த
கழனியில் கால் வைப்பவன் உழவன்.


தனக்கென துணையாய்
மாடுகளையும், கலப்பையையுமே கொண்டு
தன்னிறைவோடு உழைப்பவன் உழவன்.


கதிர் அறுத்து கட்டு கட்டி - அதனை
உனக்காக சுமப்பவன் உழவன்.


வருணனையும், சூரியனையும் உதவிக்கு கொண்டு,
நிலவினை துணை கொண்டு,
இரவினில் களம் காத்து கதிரடிப்பவன் உழவன்.


உன் பருக்கை உனை வந்து சேர,
தன் உடலை வருத்துபவன் உழவன்.


உழவனுக்காக இறைவனே எடுக்கும் விழா
இந்த உழவர் திருநாள் விழா.


இந்நாளில்  உழுபவனையும், அவன் துணைகளையும்
இறைவனாய் எண்ணி, வணங்கி வாழ்த்திடுவோம்...


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...












வாழு உன் எண்ணம் போல

உன் வாழ்கையை
நீ வாழ,
ஊரான் என்ன உனக்கு சொல்ல,
உன் கண்கள் உன்னோடு இருக்க,
பிறகு ஏன் அவர்கள் பார்க்க வேண்டும்
உனக்காக,
நீ என்பது நீயேயன்றி
வேறில்லை,
உனக்காக நீ வாழ
படைக்க பட்டவன் நீ,
வாழு உன் எண்ணம் போல.

Tuesday, 13 January 2015

பூத்து குலுங்கும் மலர்கள்

கிளைகளுக்கு தான்
எத்தனை ஆணவம்,
மலர்களை ஆடையாய்
உடுதியிருக்கிறது என்று...



வெட்கம் - அழகு

வெட்கத்தில்
அவளை பார்க்காத வரையில்
அவள் அழகை நான் உணர வில்லை...

Wednesday, 7 January 2015

கலை...


நிலவும், மலரும் கூட
கலையிழந்து தான் காட்சி அளிக்கின்றன,
அவளுக்கு முன்னாள்.

நான் எப்படி ரசிக்க ?

நிலவு கூட என்னை வெறுத்தது,
இதுவரை ரசித்த நான்
இன்று பாராமுகமாய் இருப்பதால்.
அவளை பார்த்த பிறகு
நிலவை எப்படி நான் ரசிக்க...

வாசம்

திறந்து பாருங்கள் 
ஒவ்வொரு ஆணின் இதயத்தில்
மட்டுமல்ல,
கல்லறையிலும் கூட
ஒரு பெண்ணின் வாசம் வீசும்.

நான் ரசித்தவைகள்

பூத்து குலுங்கிய மலர்கள்,
மனம் வீசிய இதழ்கள்,
கனி கொடுத்த கிளைகள்,
அவைகளை ருசித்த கிளிகளென,
அழகிய வசந்தகால நந்தவனத்தை
ரசித்தவன் நான்,
அவைகளெல்லாம் 
அவள் புன்னகையை பார்க்காத வரையில்,
என் கண்களோடு அவள் கண்கள் பேசாத வரையில்,
அவள் மூச்சு காற்று என் மேனியை தொடாத வரையில்,
அவள் வாசம் என்னை வசம் செய்யாத வரையில்,
இப்போது சற்று திரும்பி பார்த்தேன் 
நான் ரசித்தவைகளை,
அதில் அவளை தவிர வேறு இல்லை.
அவள் பின்னோடு சென்ற என் ரசனைகளோடு
அவளையும் சேர்த்து
என் நெஞ்சோடு அணைத்து கொண்டேன்.