Saturday, 13 August 2016

பனித்துளி

ஓர்நாள் வாழும் மலரும்,
அதுநாள்கூட இராத பனியும்,
கொண்ட உறவின் அழகுதான்
இயற்கையின் கவிதை.


மலர்களின் மீது
தான் கொண்ட 
காதலினால்,
தினம்தினம் வந்து
முத்தமிட்டு மடிகிறது
பனித்துளி.



காத்திருக்கும் நிலமகளை
அன்போடு
தினம்வந்து அரவணைக்கும்
பனித்துளியை,
தன்
செங்கதிர் நீட்டி
பிரித்திடுகிறான் பகலவன்.



பலவீனம்

உன் பலவீனத்தை
அடுத்தவர்
பயன்படுத்திக்கொண்டிருக்கும் வரை,
நீ
உன் கண்களால்
இவ்வுலகை காண இயலாது.

உன் பாதை உன் கையில்

நீ
ஓடும் நீராய்  இருந்தாலும்,
ஆறாய் ஓடு.
வாய்க்காலில் நீ ஓடினால்,
உன் பயணம் என்பது
பிறர் வகுத்த பாதையில்
முடியும். 

அறிவதற்காக

பிரிவு என்பது
பிரிவதற்காக அல்ல.
பிரிந்தவரைப்  பற்றி
அறிவதற்காக 

பிரிவு

நினைவுகள் என்பது
இருக்கும் வரை,
பிரிவுகள் என்பது
நிரந்தரம் இல்லை.

வெட்கம்

வெட்கம், விற்கும் விலை
எவ்வளவு என்று
கேட்பவர்களுக்கு மத்தியில்,
முகத்தில் வெட்கத்தோடு இருந்த
அவளை பார்த்தபோதே
நான் உறைந்து போனேன்.