சுதந்திரம்,
இன்றைய நிலையில்
ஒரு ரூபாய்
மிட்டாய்யிலும் ,
ஒரு நாள் விடுமுறையிலும் மட்டுமே
வாழ்கிறது நம் தாய் நாட்டின் சுதந்திரம்.
கிழிந்து கிடந்த இந்தியாவை
ஒற்றை நூல் கொண்டு
கோர்த்து சேர்த்திட வந்த
ஒரு வார்த்தை தான் சுதந்திரம்.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்,
என்று மடியும் இந்த அடிமையின் மோகம்,
தண்ணீர் விட்ட வளர்த்தோம்,
எங்கள் கண்ணீர் விட்டல்லவா காத்தோம்,
என்று மகாகவி பாடி பெட்ரா சுதந்திரம்.
இந்திய தேசிய படையின் ஊதியம்
மரணம்.
நம் சுதந்திர இந்தியாவின் அடித்தளம்
நம் மரணம் - என்று
நேதாஜி முழக்கமிட்டு பெற்று தந்த சுதந்திரம்.
ஏவலராய், கோழையராய்,
சிரம் பணிந்து அடிமையராய்,
செயலிழந்து சிலையாய், கேவலமாய் வாழ்ந்த நம்மை,
யாவரும் சமமாக்கி சீர்கொடுத்தது சுதந்திரம்.
ஆனால்,
இவையெல்லாம் இன்று மறந்தன, காற்றில் பறந்தன.
சுதந்திர கீதங்கள் நிலையிழந்து
தேசிய கீதங்கள் மதிப்பிழந்து உழன்றுகொண்டிருக்கிறது.
தேசிய கீதங்கள் திரையரங்குகளில்
ஒலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.
அங்கு வந்தவன் தான் அதை மதித்தானா என்றால்? - இல்லை
பெரும் அவமானம்தான். அதில் படித்தவன் தான் அநேகம்.
இரவில் பெற்றதாலோ என்னவோ
இன்றுவரை கண்ணுக்கு புலப்படாமலே இருக்கிறது
போராடி பெற்ற நம் சுதந்திரம்.
போற்றப்படாமலே போகிறது இன்றைய தலைமுறையில்.
நம் வரலாற்றின் பல நல்ல பக்கங்களை
நம்மால் இயன்ற வரை
கொண்டு சேர்ப்போம் இன்றைய தலைமுறைக்கு.
வாழ்க நம் சுதந்திரம், வளர்க நம் பாரதம்.