கிராமத்தானின் கிறுக்கல்கள்
Monday, 3 October 2022
அலைக்கழிப்பு
ஆழமான அன்பு
என்றுமே அலைக்கழிக்கப்படும்.
வலியால் வாடினாலும்
மீண்டும் வாசல் தேடி வரும்
நிராகரிப்பு
சில்லென விழும்
மழைத்துளியை நிராகரிக்கும்
குடை அறியாது
அந்த துளியின் கண்ணீரை.
Monday, 20 June 2022
தேர்வு முடிவு
எழுதிய
மாணவனை விடவும்,
கற்பித்த
ஆசியருக்கே கலக்கம் அதிகம்
தேர்வின் முடிவை எண்ணி.
ஒவ்வொரு
வெற்றியும், தோல்வியும்
தன் வெற்றி தோல்வியாய்
எண்ணும் உயர்ந்த ஆசிரியர்களுக்கு.
Monday, 21 February 2022
நினைவுகள்
மனதால் மட்டுமே உணரும்
சில வரிகள்
சிலருக்காக மட்டுமே.
Tuesday, 15 February 2022
மன்னிப்பு
தண்டனை என்பது மட்டுமே
அனைத்து குற்றங்களுக்கும்
தீர்ப்பாகாது.
பல நேரங்களில்
மன்னிப்பு என்பதே
சிறந்த தண்டனையே.
தனிமைப் பயணம்
உண்மையில்
அது
சிறு பயணம்தான்.
ஆயினும்,
இதுநாள்வரை இல்லாத அளவு
நீள்கிறது.
தனியே பயணிப்பதனால்.
தனிமை
நீ இல்லாத தனிமையில்
கடிகார முல்லின் நகர்வில்
தோன்றும் ஓசை கூட
பெரும் வலியை தருகிறது
இடைவெளி
சில நேரங்களில் தூரம்
நம் நெருக்கத்தை அதிகரிக்கும்.
சில நேரங்களில் அது
நம் மன அமைதியை
அழகாய் பாழ்படுத்தும்.
துயர் படுவோர்
வாய் மொழி உரைப்பாரன்று.
தூரத்தில் இருப்பவர்கள்
யாதும் அறியார்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)