Friday, 2 February 2024

ஏங்குகிறேன்

பட்டால் தானே தெரிகின்றது
பாசம் இன்னதென்று,
தொட்டால் தானே தெரிகின்றது
நெருப்பு சுடுமென்று.
நான் 
பட்டும் விட்டேன்,
தொட்டும் விட்டேன்.
சுட்டது மறந்து
பட்டது தொடருமா...
ஏங்குகிறேன்...

மன்னிப்பு - மிகப்பெரிய ஆயுதம்

பொறுமையிலும் உயர்ந்த
தவமில்லை,
திருப்தியிலும் உயர்ந்த
இன்பமில்லை,
கருணைய்யை மிஞ்சிய
அறமில்லலை,
மன்னித்தலை விட பெரிய ஆயுதம்
உலகில் எதுவுமில்லை.
                        - கண்ணதாசன்

Thursday, 1 February 2024

🌹

மண்ணிலே 
பிறந்த மலர் - நான் 
உன் கூந்தலில் 
நீ எனை சூடினால் தான்
மோட்சம் 



மன்னிப்பு

தெளிவற்ற ஒரு நெஞ்சம்
தேடுகின்றது பிராயச்சித்தம்...
என் அப்பன் சிவனே
அன்னை சக்தியே
அருளுங்கள்...

மலர்

மண்ணிலே 
பிறந்த மலர் - நான் 
உன் கூந்தலில் 
நீ எனை சூடினால் தான்
மோட்சம் 



நேற்றுவரை நான்

காற்றாய் உலா வந்த என்னை
குழலாய் வந்து, அவள்
தன்னோடு எனை கலந்து
நல்லோர் ரசிக்கும் கீதமாய் மாற்றியிருந்தால் - நேற்று வரை.
இன்று 
மீண்டும் புழுதியாய் நான்.