Monday, 21 June 2021

மாசற்ற அன்பு

கண்ணுக்கு மறைந்து போனாலும்
நெஞ்சில் இல்லாமல் போகாது.

Thursday, 17 June 2021

திறந்த உள்ளம் (Open mind)

திறந்த உள்ளம் உடையவரே
எதையும் நிலையாய் கற்கவும்,
என்றும் நிலைத்து நிற்கவும்
செய்கிறார்கள்.

Tuesday, 15 June 2021

வாழ்வதற்கென்று வந்தவர்கள்

உழுதவன் உண்பதற்கில்லை.
நெய்தவன் உடுப்பதற்கில்லை.
காப்பவன் பார்ப்பதற்கில்லை.
இம்மண்ணில்
வாழ்வதற்கென்று வந்தவர்கள்
சொற்பமே.
அவரகளுள் நாமும் 
சேர்ந்திடுவோம்.
வாழும் வரையும்
வாழ்ந்த பின்பும்
வாழைபோல் இருப்போம்.
இன்னல்கள் மறந்திருப்போம்.


Monday, 7 June 2021

எல்லாம் உன்னோடு

என் நாட்கள் 
உன் நினைவுகளோடு.
என் வானம்
உன் வண்ணங்களோடு.
என் எண்ணம்
உன் சிந்தனைகளோடு.
என் உறக்கம்
உன் கனவுகளோடு.
என் செயல்
உன் சொல்லோடு.
என் இன்பம்
உன்ன பின்னோடு.