எட்டா நிலவு
என்னை எட்டி வந்த போது,
ஆசையாய் அள்ளி
அணைத்து கொள்ள அருகில்
சென்ற எனை,
எட்டா தூரத்திற்கு
எட்டி தள்ளியது,
எனக்கு எந்த
தகுதியும் இல்லையென்று.
சல்லடையில்
சலித்து எடுக்கப்பட்ட
செல்லாக் காசு.
வாழ்வை
மேடையாக்கி நடித்த
நல்ல நடிகன்.
எதையும்
உணராத நல்லலோர்
மரக்கட்யை.
வேண்டியதை
நிகழ்த்திகொள்ளும்
காரியக்காரன்.
தான் என
எண்ணி நான் வாழும்
சுயநலவாதி.