Tuesday, 29 July 2014

அன்னை மடி...

நேற்றுவரை
நான் உறங்கிய மடி
அதோ
நின்று பார்க்கிறது...
இன்று
நான் நான் வேறொரு மடியில்
உறங்குவதை.

எனக்கென
அவள் கொடுத்த
இன்னொரு தாயின் மடியில்.

என்னை
தூர நின்று பார்க்கிறாள்,
தாம்
தொலைத்துவிட்டோமோ என்று.

தொலைந்து போக
நான் நினைவுகள்  அல்ல...
அவளின் நிழல் .
என் சுவாசம் அவள் என்பது
புரியாத உயிராய்,
புதிராய் நிற்கிறாள் என் அன்னை.

Thursday, 24 July 2014

என் சுவாசக்காற்று

என் மீது அவள் கொண்ட நேசம் தான் என்ன!
எட்டி நிற்கும் என்னை
தொட்டு அழைக்கிறாள்!

தினம் தினம் என்னை தழுவும்
அவளது கரங்கள்
அவளின்றி நான் இல்லை என்பதை
சொல்லாமல் எனக்கு சொல்லும்.

நான், என்னை உணர்ந்தது குறைவு,
அவள் என்னை உணர்ந்ததை விட,
எந்நேரமும் எனக்குள் இருப்பவள்
அவளல்லவா!

எனது இதயம் அவளது ஆலயம்,
நான் வாழ, அவளல்லவா சுவாசிக்கிறாள்,
அவள் வருவதும், வாழ்வதும்
எனக்காக அல்லவா!

நான் எட்டி நின்றாலும்
என்னை விடுவதில்லை,

நான் கொண்ட காதல் பிற உயிர்களின் மீது,
அவள் கொண்ட காதல் என் உயிரின் மீது,

கனவில் கலந்து, நினைவில் நிறைந்தவள்,
காவலாய் நின்று காத்திருப்பாள்,
எந்நேரமும் என்னுடன்.

அவளை நிழலென்றால் நிஜமில்லாமல் போகும்,
காற்று என்றால் ஒருமித்து போகும்
என் சுவாசத்தோடு,
என் சுவசக்கற்றாய்..

Monday, 14 July 2014

பணம்... பணம்... பணம்...

அரை ஆடை உடுத்திய
மனிதனின் தலைக்காக
அரை குறை ஆடையுடன்
குத்தாட்டம் போடும் அம்மணிகள்...

                    --- குத்தாட்ட நடிகைகள்

எரியாத மின்விளக்குகள் ...

பகலில்
உழைத்த களைப்பில்,
இரவில்
உறங்கிக்கொண்டிருந்தன
எங்கள்
கிராமத்து மின்விளக்குகள்...

Friday, 11 July 2014

தொலையாத இன்பங்கள்


இன்பங்கள் வருவதில்லை,
காரணம்
அவைகள் உன்னைவிட்டு தொலைந்ததும் இல்லை.

பதியுங்கள் உங்கள் காலடி சுவடுகளை


நிஜங்களுக்கு இடையில்
கனவுகளை கண்டிருந்தோம் - இன்று நாம்
கனவுகளில் நிஜங்களை
தேடி அலைகிறோம்.

நிஜங்கள்
நிரந்தரமில்லா இவ்வுலகில்
நினைவுகளை மட்டுமே சுமந்து செல்லும்
நாம்
கடந்து போகும் காலங்களில் பதிப்போம்
நம்
காலடி சுவடுகளை
சுதந்திரமாய்...

அழகு

அன்னப்பறவை இருந்திருந்தால்
துறந்திருக்கும தன் உயிரை.
உன் நடை அழகில்...

மண் வாசனை



மண்ணாய் இருந்த
என்னையும் வாசமாக்கினால்,
மழையாய் வந்த என் மனையாள்.

என்னைப் படித்தவர்கள்


என்னை
கருவில் சுமந்தவளுக்கு ஈடானவள்
என் கருவை சுமப்பவள் - காரணம்
என்னை விட
அதிகம் படித்தவர்கள்
இவர்கள் தான்.
என் எண்ணங்களை.

கடல் காதலி


தினம் தினம் ஒரு கோலம்
உன் அழகிற்கு நீ செய்த
தவம் தான் என்னவோ!

கோடான கோடி கால்கள்
தினம் தினம் உன்னை நாடி வர!
என்னே வியப்பு உன் அழகில்,

ஆயிரம் ஆயிரம் மட்டுமா,
லட்சோப லட்சமா? அல்ல அல்ல
கோடான கோடி கண்கள் அல்லவா
உன் மீது வீசின காதல் வலையை,

எவர் வலையிலும் சிக்காத
உன் பெண்மைதான் என்ன!

உன் அழகில் நனைந்து சென்றாலும்
அவர்களின் தாகம் தான் தனியவில்லையே
அது தான் ஏனோ!

விட்டு சென்றாலும் தொடர்ந்து வருகிறாயே வீடுவரை!
மீண்டும் வந்து உன்னை தொடவா?

தொட்டாலும் சட்டென்று விலகும்
உன் பெண்மைக்கு ஈடு இணை தான் எது?

ஆடவரன்றி, பெண்டிரையும், சிராரையும்
உன் மனதில் கால் பதிக்க செய்யும்
உன் அழகின் பிறப்பிடம் தான் எது?

உன் மூன்றெழுத்து பெயருக்கு
ஏற்றார்போல் தான் படைத்தானோ
இறைவன், காதல் என்பதையும் மூன்றெழுத்தில்.

உன்னை பற்றி பாடாத கவிஞன் தான் ஏது?
கடல் என்ற உனக்கு காப்பியம் தான் இல்லை.
ஆனால் காதலர்கள் அதிகம்.

என்னை போல!

புத்தகம்

பெண் என்ற நூலகத்தில்
என்னால் படிக்க முடிந்த ஒரே புத்தகம்
அவளது கண்கள் ...

Thursday, 10 July 2014

அதிசயம்

பார்த்ததும்
உன்னை னை அதிசயம் என்று கூற என்னைப்போல்
அவர்கள்
உன்னுடன் பழகியிருக்கவில்லையே.

காதல்

காலத்தின் கட்டாயத்தில்
கடந்து போகும் நிமிடங்களுக்கு இடையில்
உணரும் ஓர் உன்னத உணர்வு தான் ஒரு பெண்ணின் காதல்.

Friday, 2 May 2014

தாய்மை

உன் தாய் கடவுளின் பாதி,
உன்னுள் மீதி.
அவளுக்காக என்றுமே விழித்திரு,
உனக்காக என்றுமே பசித்திரு.
உன் கவலையில் தனித்திரு-ஆனால்
உன் தாயுடன் சேர்ந்திரு.
உனக்கென எழுதவில்லை எதுவும்-ஆனால்
உனக்காகவே உள்ளன அவ்வளவும்.
மனிதா! உனக்கானவை உனக்கு மட்டுமே-ஆனால்
அது நடக்கும் தாயின் துணை இருந்தால் மட்டுமே

Thursday, 1 May 2014

எனது நட்புக்காக

தந்தையிடம் கதை சொல்லி,
தாயிடம் பொய் சொல்லி,
குருவிடம் அடி வாங்கியபோதும்,
கடவுளுக்கு நன்றி சொல்லி,
சாதி, மதம், இனம் பாராது,
ஆண், பெண் வேறுபாடின்றி,
சாலையோரம் கை கோர்த்து,
கடற்கரையில் கால் நனைத்து,
முடிவென்ற சொல் அறியாத,
உயிரோடு கலந்த,
இன்பத்தின் இருப்பிடமான
ஒரு உறவு
நட்பு...

Tuesday, 29 April 2014

காதல் உயர்வானது...


 இதில் பார்வைகள் தவறாவதில்லை.
இதில் கல்லும் கடவுளாகும்.
இதில் வெற்று காகிதமும் கவி பாடும்.
இதில் கடலும் கடந்து போகும்.
இதில் காலமும்  உறைந்து போகும்.
காதல், இதை உணர்தவர்கள் உறவாடுவதில்லை, உயிராகிறாகள்.
இதில், மற்றவர்கள் உடலாகிறார்கள்...

Saturday, 19 April 2014

காதலில் வெற்றி

காற்று, வானம், பூமியும் வந்து காதல் பேசும். இதயம் கோவிலாகும். பார்வைகள் தவறாகாது. இதயமும் தடை போடாது. கடலையும் எடை போடலாம். கண்ணி அவள் காதல் உன்னிடம் இருக்குமானால்.