தினம்
தினம் ஒரு கோலம்
உன் அழகிற்கு நீ செய்த
தவம் தான் என்னவோ!
கோடான
கோடி கால்கள்
தினம்
தினம் உன்னை நாடி வர!
என்னே
வியப்பு உன் அழகில்,
ஆயிரம்
ஆயிரம் மட்டுமா,
லட்சோப
லட்சமா? அல்ல அல்ல
கோடான
கோடி கண்கள் அல்லவா
உன் மீது வீசின காதல்
வலையை,
எவர் வலையிலும் சிக்காத
உன் பெண்மைதான் என்ன!
உன் அழகில் நனைந்து சென்றாலும்
அவர்களின்
தாகம் தான் தனியவில்லையே
அது தான் ஏனோ!
விட்டு
சென்றாலும் தொடர்ந்து வருகிறாயே வீடுவரை!
மீண்டும்
வந்து உன்னை தொடவா?
தொட்டாலும்
சட்டென்று விலகும்
உன் பெண்மைக்கு ஈடு இணை தான்
எது?
ஆடவரன்றி,
பெண்டிரையும், சிராரையும்
உன் மனதில் கால் பதிக்க
செய்யும்
உன் அழகின் பிறப்பிடம் தான்
எது?
உன் மூன்றெழுத்து பெயருக்கு
ஏற்றார்போல்
தான் படைத்தானோ
இறைவன்,
காதல் என்பதையும் மூன்றெழுத்தில்.
உன்னை
பற்றி பாடாத கவிஞன் தான்
ஏது?
கடல் என்ற உனக்கு காப்பியம்
தான் இல்லை.
ஆனால்
காதலர்கள் அதிகம்.
என்னை
போல!
No comments:
Post a Comment