Tuesday, 18 May 2021

கலங்காதிரு மனமே!!!

 சிறிது சிறிதாய் நீ

சிதைந்துகொண்டிருக்கும் வேளையில்,

நீ சிந்திக்க  தொடங்கிய நொடியே,

நிறுத்தப்படுகிறது  நீ சிதைவது.

காணும் துன்பங்கள் யாவும் 

கானலாய்  மறையும் பிம்பங்கள்.

நிம்மதி மட்டுமே 

இறுதிவரை தொடரும் நிஜங்கள்.

இதை அறிந்துகொண்ட 

உள்ளம் கலங்குவதில்லை. 

காலம் வரும் வரை 

காத்திருப்பதும் தவறில்லை.

No comments:

Post a Comment