சற்றே நின்று நாம் சிந்திக்க வேண்டிய தருணம்,
விவசாயி, இவன் அழுகிறான்,
சரி, அழட்டும்.
அழுத பின் என்ன செய்கிறான்.
தனக்கான நிலை என்ன என்பதை அறிய மறுக்கிறான்.
நம் நாட்டின் முதுகெலும்பாம் இவன்,
அனைவரும் சொல்வது.
அப்படியெனில், எனது கேள்வி..
இந்தியா முதுகெலும்பில்லாமல் தான் செயல்படுகிறதா...
இங்கே விவசாயி எங்கிருக்கிறான்,
இருந்தால் காட்டுங்களேன்.
கல்லறையை நோக்கி பயணிக்க வேண்டாம்.
அல்லது,
காலத்தை பின்நோக்கி செலுத்த வேண்டாம்.
நாம் பார்த்த காடு, கழனிகள் எங்கே?
நாம் ஓடிய வாய்க்கால், வரப்புகள் எங்கே?
நாம் பழகிய ஆடு, மாடுகள் எங்கே?
அசை போட்டு பாருங்கள் உங்கள் கடந்த காலங்களை.
விளைநிலங்களெல்லாம்
விலையாகிப்போயின.
விளைவித்தவர்கள் எல்லாம்
விடைபெற்றுக்கொள்கின்றனர்.
பார்வைகள் மாறலாம்,
காட்சிகள் மாறலாமா?
உழுகின்ற கால்கள் மாறலாம்.
உழுகின்ற கழனி மறையலாமா?
படைப்பு
தமிழ் ரசிகன்
No comments:
Post a Comment