| தெரியவில்லை |
| இருந்தும் பார்க்கிறேன், |
| நான் இருக்கும் |
| உந்தன் இதயத்தை. |
| உணரவில்லை |
| இருந்தும் சுவாசிக்கிறேன், |
| நீ கடந்த பின்னும் வீசும் |
| உந்தன் சுவாசத்தை. |
| கேட்கவில்லை |
| இருந்தும் உணர்கிறேன், |
| ஒலி பெருக்கி வைத்தும் கேட்காத |
| உந்தன் சிரிப்பொலியை. |
| பார்க்கவில்லை |
| இருந்தும் ரசிக்கிறேன், |
| என்னை பாராத |
| உந்தன் விழிகளை. |
| தொடவில்லை |
| இருந்தும் அணைக்கிறேன், |
| உன்னை இன்னும் அழகாய் காட்டும் |
| உந்தன் நிழலை. |
| துணையில்லை |
| இருந்தும் நடக்கிறேன், |
| துணையாய் இருக்கும் |
| உந்தன் காதலை எண்ணி. |
| உணவில்லை |
| இருந்தும் வாழ்கிறேன், |
| கேள், என்னோடு கலந்திருக்கும் |
| உந்தன் ஜீவனை. |
| காதலில்லை |
| இருந்தும் காத்திருக்கிறேன், |
| நிச்சயம் ஒருநாள் |
| எந்தன் கரம் பிடிப்பாய் என்ற நம்பிக்கையில். |
Thursday, 18 February 2016
ஒருதலை காதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment