விதையின்றி முளைத்த செடி,
பந்தலின்றி படர்ந்த கொடி,
கிளையின்றி துளிர்த்த இலை,
மலரின்றி வீசும் மனம்.
உறவின்றி கிடைத்த உன்னதம்,
அளவின்றி கிடைக்கும் ஆனந்தம்,
குறைவின்றி வைக்கும் நம்பிக்கை,
சுதந்திரமாய் வாய்த்த அடிமை.
முயற்சியின்றி கிடைத்த வெற்றி,
தொய்வின்றி கிடைக்கும் உறுதுணை,
வேண்டுகோளின்றி உதவும் கரம்.
தட்சணையின்றி காக்கும் கடவுள்.
நீயின்றி,
நானின்றி நாமென்று சொல்வது!!!
இரவு, பகல் பாராது உடன் வந்து சேர்வது!!!
மூன்றெழுத்து மந்திரத்தில் மிக முக்கியமாய்
போற்றுவது!!!
அது , அம்மா - அப்பாவிற்கு அடுத்தபடியானது!!!
No comments:
Post a Comment