Saturday, 20 June 2015

உனக்காக அனைத்துமாய்...


வண்ணத்து பூச்சியே
உன் வண்ணமாய் நான் இங்கிருக்க 
என்னைவிட்டு தள்ளி ஏன் நிற்கிறாய்,

சிட்டு குருவியே
உன் சிறகுகளாய் நான் இங்கிருக்க
என்னைவிட்டு தூர ஏன் பறக்கிறாய்,

கண்ணின் மணியே
உன் மணியாய் நான் இங்கிருக்க
என்னை தூர ஏன் தேடுகிறாய்,

அன்ன பறவையே
கறந்த பாலாய் நான் இங்கிருக்க
என்னை விட்டு நீரை ஏன் பருகுகிறாய்,

கூவும் குயிலே
உன் குரலாய் நான் இங்கிருக்க ,
என்னை விட்டு தனியே ஏன் பாடுகிறாய்,

வானவில்லின் வண்ணமே
உன் மேகமாய் நான் இங்கிருக்க
என்னை விட்டு நீ எங்கே தோன்றுவாய்,

மனம் வீசும் மல்லிகையே
உன்னை சூடும் கேசமாய் நான் இங்கிருக்க
என்னை விட்டு நீ எங்கே குடியிருப்பாய்,

கை கோர்த்த மணமகளே
உன் மணமகனாய் நான் இங்கிருக்க
என்னை விட்டு நீ தவிதிருப்பதேன்,

உனக்காக
அனைத்துமாய் நான் இங்கிருக்க
என்னை விட்டு நீ  ஏன்  அங்கிருக்கிறாய் .
விரைந்து வா, விழிகளோடு பேச, விரல்களோடு உறவாட...

No comments:

Post a Comment