அவனியில் உள்ளோர் உணவருந்த
கழனியில் கால் வைப்பவன் உழவன்.
தனக்கென துணையாய்
மாடுகளையும், கலப்பையையுமே கொண்டு
தன்னிறைவோடு உழைப்பவன் உழவன்.
கதிர் அறுத்து கட்டு கட்டி - அதனை
உனக்காக சுமப்பவன் உழவன்.
வருணனையும், சூரியனையும் உதவிக்கு கொண்டு,
நிலவினை துணை கொண்டு,
இரவினில் களம் காத்து கதிரடிப்பவன் உழவன்.
உன் பருக்கை உனை வந்து சேர,
தன் உடலை வருத்துபவன் உழவன்.
உழவனுக்காக இறைவனே எடுக்கும் விழா
இந்த உழவர் திருநாள் விழா.
இந்நாளில் உழுபவனையும், அவன் துணைகளையும்
இறைவனாய் எண்ணி, வணங்கி வாழ்த்திடுவோம்...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
கழனியில் கால் வைப்பவன் உழவன்.
தனக்கென துணையாய்
மாடுகளையும், கலப்பையையுமே கொண்டு
தன்னிறைவோடு உழைப்பவன் உழவன்.
கதிர் அறுத்து கட்டு கட்டி - அதனை
உனக்காக சுமப்பவன் உழவன்.
வருணனையும், சூரியனையும் உதவிக்கு கொண்டு,
நிலவினை துணை கொண்டு,
இரவினில் களம் காத்து கதிரடிப்பவன் உழவன்.
உன் பருக்கை உனை வந்து சேர,
தன் உடலை வருத்துபவன் உழவன்.
உழவனுக்காக இறைவனே எடுக்கும் விழா
இந்த உழவர் திருநாள் விழா.
இந்நாளில் உழுபவனையும், அவன் துணைகளையும்
இறைவனாய் எண்ணி, வணங்கி வாழ்த்திடுவோம்...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment