Monday, 22 January 2024

யாவும் நான்

சல்லடையில் 
சலித்து எடுக்கப்பட்ட
செல்லாக் காசு.
வாழ்வை
மேடையாக்கி நடித்த
நல்ல நடிகன்.
எதையும்
உணராத நல்லலோர்
மரக்கட்யை.
வேண்டியதை
நிகழ்த்திகொள்ளும் 
காரியக்காரன்.
தான் என
எண்ணி நான் வாழும்
சுயநலவாதி.



No comments:

Post a Comment